பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளில் சுகாதாரத் திணைக்களத்தின் முடிவே உத்தியோக பூர்வமானதாகும் – அரசாங்க அதிபர்..!!!


யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளில் சுகாதாரத் திணைக்களம் ஊடாக வெளியிடப்படும் முடிவே உத்தியோக பூர்வமானதாகும் என்று யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கொரோனாத் தொற்று தொடர்பான தற்போதைய நிலைப்பாட்டை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது, கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்ட தொற்றாளர் விபரங்களில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வெளியிடப்பட்டமை தொடர்பாகச்  செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Previous Post Next Post


Put your ad code here