யாழ்ப்பாண கல்வி வலயம் மற்றும் வலிகாமம் கல்வி வலயத்துக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் நாளை (15) முதல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.
ஏற்கனவே யாழ்ப்பாணம், வலிகாமம் உடுவில் கோட்டக்கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.