டல்ஜித் அளுவிஹாரே, மாத்தளை மாநகர சபையின் மேயர் பதவியிலிருந்து உடன் அமுலுக்குவரும் வகையில் விலக்கப்பட்டுள்ளார்.
மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ கமகேயினால் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் ஊடாக அவர் விலக்கப்பட்டுள்ளார்.
டல்ஜித் அளுவிஹாரேவிற்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து மேல் நீதிமன்ற ஓய்வூ பெற்ற நீதிபதி குசலா சரோஜினியினால் நடத்தப்பட்ட விசாரணைகள் தொடர்பிலான அறிக்கை கடந்த 24ம் திகதி ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் பிரகாரம், டல்ஜித் அளுவிஹாரே, மாநகர சபை மேயர் பதவியில் மாநகர சபை கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் குற்றம் இழைத்துள்ளதாக தெரிவித்து, மாநகர கட்டளை சட்டத்தின் காணப்படுகின்ற சரத்துக்களுக்கு அமைய வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக பதவி விலக்கப்பட்டுள்ளார்.
Tags:
sri lanka news
