கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
சுகாதார தரப்பினருடன் அவர் இன்று வியாழக்கிழமை சந்திப்பொன்றை நடத்தினார்.
இச்சந்திப்பின்போது கட்டுநாயக்க விமான நிலையத்தை மீளத்திறப்பது குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டது.
குறிப்பாக சுகாதார விதி முறைகளுக்கு அமைய, முதலில் சுற்றுலாப் பயணிகளுக்காகவும், பின்னர் சுகாதாரக் கட்டுப்பாடுகளுடன் பயணிகளுக்காகவும் விமான நிலையத்தை திறக்க அமைச்சர் இணங்கியிருக்கின்றார் என தெரிவிக்கப்படுகின்றது.
பெரும்பாலும் ஜனவரி மாத ஆரம்பத்தில் விமான நிலையம் திறக்கப்படலாம் என்றும் நம்பப்படுகின்றது.
Tags:
sri lanka news
