பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தனியார் நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சித்ரா தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர். இவருக்கென் தனி ரசிகர் வட்டம் உள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் சித்ராவுக்கு தொழில் அதிபர் ஹேமநாத் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது.
கொரோனா ஊரடங்கு முடிந்த பின் திருமண திகதியை முடிவு செய்யவிருந்தார். ஜனவரியில் திருமணம் நடக்கலாம் என கூறப்பட்டது.
இந்நிலையில், சென்னையை அடுத்த நாசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சமூகவலைதளத்தில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் சித்ரா, அடிக்கடி விதவிதமான ஆடை அணிந்து கொண்டு ஏராளமான புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.
டிக் டொக் போன்ற செயலிகளிலும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார். சமூகவலைதளத்தில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
சித்ராவின் இந்த விபரீத முடிவு சின்னத்திரை நடிகர்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
