கிளிநொச்சி, காரைநகர் பாடசாலைகள் எதிர்வரும் திங்கள் முதல் இயங்கும்..!!!



வடக்கு மாகாண பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமை போன்று இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

கொரோனா அச்சம் காரணமாக கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளும் யாழ்ப்பாணத்தில் காரைநகர் இந்துக் கல்லூரியும் மூடப்பட்டிருந்தன.

எனினும் அப்பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் எவருக்கும் கொரோனா தொற்றுக்கள் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து பாடசாலைகள் எதிர்வரும் 7 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வடக்கு சுகாதார பணிப்பாளர் வடக்கு கல்வி அமைச்சின் செயலாளருக்கு உரிய அறிவித்தலை வழங்கியுள்ளார்.
இந்நிலையில், தரம் 6 தொடக்கம் க.பொ.த உயர்தரம் வரையான வகுப்புக்கள் எதிர்வரும் 7 ஆம் திகதி தொடக்கம் நடைபெறும்.
நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகளில் தரம் 1 தொக்கம் 5 வரையான வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு இதுவரை கல்வி அமைச்சு அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here