“யாழ்ப்பாணம் மாநகர வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள், பணியாளர்கள் என 870 பேரிடம் மாதிரிகள் பெறப்பட்டுள்ளன. அவை நாளைய தினம் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்படும்” என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
அத்துடன் நாளைய தினமும் மேலும் ஒரு பகுதியினரிடம் மாதிரிகள் பெறப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
யாழ்ப்பாணம் மாநகர மரக்கறிச் சந்தை, கடைத் தொகுதிகள் மற்றும் நவீன சந்தைக் கட்டடத் தொகுதி உள்ளிட்ட இடங்களில் வியாபாரிகள், பணியாளர்கள் கொவிட் -19 தொற்றாளர்களாக கடந்த வாரம் அடையாளம் காணப்பட்டனர்.
அதனையடுத்து யாழ்ப்பாணம் மாநகரின் மத்தி முடக்கப்பட்டது. முடக்கப்பட்ட பகுதி வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள், பணியாளர்கள் என 870 பேரிடம் மாதிரிகள் பெறப்பட்டுள்ளன. அவை நாளைய தினம் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்படவுள்ளது.