வவுனியாவில் தாமரைப் பூ பறிக்கச்சென்ற ஆசிரியர் ஒருவர் வைரவபுளியங்குளம் குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஆசிரியர் இன்றையதினம் அந்த பகுதியில் உள்ள குளத்தில் தாமரைப்பூவினை பறிப்பதற்காக சென்றுள்ளார். எனினும் நீண்ட நேரமாகியும் அவரை காணவில்லை.இதனையடுத்து அப்பகுதியில் ஒன்றுகூடிய பொதுமக்கள் தேடுதல் மேற்கொண்டதுடன் சம்பவம் தொடர்பில், பொலிஸாருக்கும் தெரியப்படுத்தினர்.
நீண்ட நேரத்தின் பின்னர் குறித்த ஆசிரியரின் சடலம் குளத்தில் இருந்து பொதுமக்களால் மீட்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் வவுனியா நகரப் பாடசாலை ஒன்றில் ஆசிரியரான பரந்தாமன் (வயது-33) என்பவரே உயிரிழந்தார்.
ஆலயம் ஒன்றின் தேவைக்காக தாமைரப்பூவை பறிக்கச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
Tags:
sri lanka news