யாழில் தரகுப் பணம் கொடுக்காததால் தரகர் உயிர்மாய்ப்பு..!!!


யாழில், திருமணத் தரகுப் பணம் கொடுக்காததால் மனவிரக்தியடைந்த தரகர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். சுன்னாகம் – சூராவத்தை பகுதியைச் சேர்ந்த செல்லப்பா பரமரத்தினம் (வயது 62) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் தனது ஊரில் திருமணம் ஒன்றிற்கு தரகராக செயற்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கான தரகுப் பணம் கொடுக்கப்படவில்லை.

இவ்வாறான சூழ்நிலையில் இந்த விடயத்தை அவர் இணக்க சபை, நீதிமன்றம் வரை கொண்டு சென்றுள்ளார். இருப்பினும் அவர் பதிவு செய்யப்படாத தரகர் என்ற ரீதியில் அவருக்கான பணம் கொடுக்கப்படவில்லை.

இவ்வாறான சூழ்நிலையில் நேற்று முன்தினம் (21) உரும்பிராய் வடக்குப் பகுதியில் உள்ள வயலுக்கு சென்று விஷம் அருந்தி உயிரை மாய்த்துள்ளார்.

பின்னர் அவரது சடலம் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு உடற்கூற்றுப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். சாட்சிகளை சுன்னாகம் பொலிஸார் நெறிப்படுத்தினர்.
Previous Post Next Post


Put your ad code here