மன்னார் - யாழ்ப்பாணத்திற்கு இடையில் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான NA 8885 எனும் இலக்க பேருந்து பாவனைக்கு உதவாத நிலையில் சேவையில் ஈடுபட்டுள்ளது.
பேருந்தின் இருக்கைகள் கிழிந்த நிலையில் காணப்படுகின்றன. அத்துடன் உள்ளே துப்பரவு செய்யாத நிலையில் பேருந்து இருப்பதனால் அதில் பயணிப்போர் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர்.
அது மட்டுமின்றி உரிய பராமரிப்பு இல்லாமையால் , காப்பெட் வீதிகளில் கூட பேருந்து குலுக்கலுடன் செல்வதனால் பயணிகள் சிரமங்களுக்கு முகம் கொடுக்கின்றனர்.
இது குறித்து இன்றைய தினம் காலை மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வருகை தந்த பயணி ஒருவர் முகநூலில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்,
" இன்று மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் புறப்பட்ட 4.30 am பஸ், உள்ளே ஏறும் போதே கன நாட்களுக்கு பின் ஒரு பாழடைந்த பஸ்ஸிற்குள் நுழையும் அனுபவத்தை குடுத்தது. கிழிந்த பராமரிப்ப்பற்ற இருக்கைகள், உடைந்த கண்ணாடிகள் துப்பரவே செய்யப்படாத இந்த பேரூந்தை எப்படி மக்கள் போக்குவரத்துக்கு பாவிக்கிறார்கள் என தோணியது. சரி வெளித்தோற்றம் தான் இப்படி இருக்கிறது என்று நினைத்து முடிப்பதற்குள் பஸ் start செய்து ஓட ஆரம்பித்தது. காப்பட் ரோட்டில் இவ்வளவு குலுக்கத்துடன் போவதற்கு மாட்டுவண்டிலால் கூட முடியாது. வயதானவர்களோ நோயாளிகளோ கர்ப்பிணி பெண்களோ எறிவிடக்கூடாத பஸ்.எப்படியும் இடைவெளியில் நொறுங்கி விழுந்து விடும் என தோணவே எதற்கும் இருக்கட்டும் என சில போட்டோக்களை எனது போனில் எடுத்து வைத்தேன். எதிர்பார்த்ததை போலவே பஸ் நொறுங்கி விழுந்து பெரிய விபத்துக்கள் எதுகும் இடம்பெற முதல் பட்ச் ஆகி ஜெயபுரத்தில் நின்று விட்டது கூட உள்ளிருந்த மக்களின் பிரார்த்தனையின் பலனாக இருக்கலாம்.
இதை வேறு எந்த மாவட்டத்திலாவது பாவிக்க இதே CTB துணிவார்களா?? மன்னார் என்றால் மட்டும் இந்த அலட்சியம் ஏன்? Doctors appointment உட்பட பல முக்கிய வேலைகளுடன் வெளிக்கிட்ட மக்களை நடுத்தெருவில் நிறுத்தி விடுவதுதான் மன்னார் CTB யின் மக்கள் சேவையா?? என்னசெய்தாலும் யாரும் கேட்க மாட்டார்கள் என்கிற mind set உம் மக்களாகிய நாம் உருவாக்கியது தானே??" என தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
Tags:
sri lanka news