யாழ்ப்பாணத்தில் மேலும் 21 பேருக்கு கொரோனா தொற்று..!!!


யாழ்ப்பாணத்தில் மேலும் 21 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அவர்களில் 8 பேர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடம் என இரண்டிலும் 702 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.

21 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 8 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

பருத்தித்துறை வைத்தியசாலை நோயாளர் விடுதியில் மூன்று பேருக்கும் வைத்தியசாலை உத்தியோகத்தர் ஒருவருக்கும் என நால்வருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்.

சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த இருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் ஏற்கனவே சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள்.

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் சுயதனிமைப்படுத்தலில் கண்காணிக்கப்பட்டவர்

தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற மூவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது ” என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாநகரில் சந்தை மற்றும் கடைத் தொகுதிகளைச் சேர்ந்த 460 பேரின் மாதிரிகள் முள்ளேரியா ஆய்வுகூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அவற்றின் பிசிஆர் பரிசோதனை அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்

Previous Post Next Post


Put your ad code here