யாழில். 7 கிலோ ஐஸ் போதை பொருளுடன் நால்வர் கைது..!!!


இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு ஐஸ், ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருளைக் கடத்தி வந்து விநியோகித்து வந்த பிரதான சந்தேக நபர் உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து 7 கிலோ கிராம் ஐஸ் மற்றும் 10 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

24, 26, 34 மற்றும் 38 வயதுடைய குருநகரைச் சேர்ந்த இருவரும் நீர்வேலி, கோப்பாயைச் சேர்ந்த தலா  ஒருவருமே கைது செய்யப்படனர்.

கடற்தொழிலாளிகளாக நால்வரிடமிருந்து கூலர் வாகனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத்தப்படுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்ஸ்ஸின் வழிகாட்டலில் உப பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான அணி இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்தது.

Previous Post Next Post


Put your ad code here