பிரிட்டனில் பரவி வரும் வைரஸ் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டது..!!!


நாட்டில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவின் விகாரம் இல்லை என்றும், அது பிரிட்டனில் பரவி வரும் B.1.1.7 என்ற வைரஸ் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு, பொரலஸ்கமுவ மற்றும் குருணாகல் ஆகிய பிரதேசங்களிலிருந்து பெறப்பட்ட மாதிரிகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர இதை தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post


Put your ad code here