வடமாகணத்திற்கான “வாரி செளபாக்கியா” திட்டத்தின் இணைப்பாளராக பவதாரணி ராஜசிங்கம்..!!!


நீர்ப்பாசன அமைச்சு மற்றும் உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்சவினால் வட மாகணத்திற்கான “வாரி செளபாக்கியா” திட்டத்தின் இணைப்பாளராக திருமதி பவதாரணி ராஜசிங்கம் இன்று நியமிக்கப்பட்டார்.

கொள்கைப்பிரசார காலத்தில் “வரப்புயர” என்ற சிந்தனையை வேராக கொண்டு களமிறங்கிய இவர் இன்று நீர்ப்பாசன அமைச்சின் திட்டமிடல் நடவடிக்கைக்களில் தொடர்ந்தும் பங்காற்றுவதன் மூலம் தனது கொள்கைகளை வடக்கு மக்களுக்காய் முன்னகர்த்திக் கொண்டிருக்கின்றார்.

இதனைபற்றி பவதாரணி ராஜசிங்கம் கருத்து தெரிவிக்கையில்

நான் இன்னும் எனது கொள்கையின் வழியிலேயே நடந்துகொண்டிருக்கன்றேன். இன்று இந்த நீர்பாசன அமைச்சின் வடமாகாணத்திற்கான இணைப்பாளராக பொறுப்பேற்றுக்கொண்டேன். வரப்புயர என்பது வெறும் வார்தைகளாய் மட்டுமல்ல எனது வாழ்க்கையின் அங்கமாகவே அமைந்திருக்கின்றதென்பது நிறைவாய் உள்ளது. மக்களுக்காய் தொடர்ந்து பயணிப்பது நாட்காலிகளில் அமருவதைக்காட்டிலும் எனக்கு மகிழ்வானது என அவர் தெரிவித்தருந்தார்.

மேலும் இவர் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் வட மாகாண இணைப்பாளராக பணியாற்றியமையும் குறப்பிடத்தக்கது.

Previous Post Next Post


Put your ad code here