கொவிட் பரவலுக்கு மத்தியில் விமான நிலையத்தில் கடும் கட்டுப்பாடு..!!!


கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு, பயணிகளுடன் விருந்தினர்கள் வருகைத்தர மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்திற்கு உட்பிரவேசிக்கும் மற்றும் வெளியேறும் பார்வையாளர்கள் முனையம் மூடப்பட்டுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது.

கொவிட் பரவலை அடுத்தே, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் கொவிட் பரவலுக்கு மத்தியிலும் சுற்றுலா பயணிகள் அழைத்து வரப்படுவார்கள் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிக்கின்றார்.

சுகாதார பிரிவின் ஆலோசனைகளுக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அவர் கூறுகின்றார்.

மேலும், வெளிநாடுகளிலுள்ள இலங்கை பிரஜைகளை அழைத்து வரும் நடவடிக்கையில் மாற்றங்களை ஏற்படுத்துவது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை என அமைச்சர் கூறுகின்றார்.

Previous Post Next Post


Put your ad code here