முல்லைத்தீவில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் பலி..!!!


முல்லைத்தீவு-வட்டுவாகல் பாலத்திற்கு அருகில் உள்ள காணி ஒன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வட்டுவாகல் பாலத்திற்கு அண்மையாக உள்ள காணி ஒன்றில் இந்த வெடிப்புச் சம்பவம் இன்று (25) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வெடிப்புச் சம்பவம் எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

குறித்த வெடிப்பு சம்பவம் காரணமாக சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்ததோடு மற்றொருவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளார்.

சம்பவத்தில் 19 வயதுடைய செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவரரே உயிரிழந்துள்ளார். மேலும் காயமடைந்த நபர் வட்டுவாகல் பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய வெடிமருந்து நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous Post Next Post


Put your ad code here