உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள பாடசாலைகள், பாலர் பாடசாலைகள் மற்றும் அறநெறி பாடசாலைகள் எதிர்வரும் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை மூடப்படுவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
Tags:
sri lanka news