சிறு குழந்தைகளுக்கு மத்தியில் தற்போது மிக வேகமாக ஒரு தொற்று நோய் பரவி வருகின்றமையை காண முடிகின்றது என குழந்தைகள் தொடர்பிலான விசேட வைத்தியர் திபால் பெரேரா தெரிவிக்கின்றார்.
ஏன்ட் புட் மௌத் டீசீஸ் (Hand Put Mouth Disease) என்ற தோல் நோய் ஒன்றே இவ்வாறு பரவி வருவதை காண முடிகின்றது என அவர் கூறுகின்றார்.
இந்த நோய், 6 மாதம் முதல் 5 வயது வரையான குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
காய்ச்சல், உடம்பு வலி, கைகள், கால்கள் மற்றும் வாய் ஆகிய பகுதிகளில் சிவப்பு நிறத்திலான தழும்புகள் ஏற்படுகின்றமை, இந்த நோய்க்கான முதல் கட்ட அறிகுறிகள் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நோயானது, ஒரு குழந்தையிடமிருந்து மற்றுமொரு குழந்தைக்கு தொற்றும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் கூறுகின்றார்.
Tags:
sri lanka news
