எகிப்தில் நேற்று ரயில் ஒன்று தடம்புரண்டதால் குறைந்தபட்சம் 11 பேர் பலியானதுடன் 98 பேர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தலைநகர் கெய்ரோவிலிருந்து 40 கிலோமீற்றர் தொலைவிலுள்ள டோக் நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கெய்ரோவிலிருந்து மன்சோரா நகரை நோக்கி சென்றுகொண்டிருந்த ரயிலொன்றே இவ்வாறு தடம்புரண்டுள்ளது.
இதற்கான காரணம் தெரியவில்லை. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக விசாரணையாளர்கள் அனுப்பப்பட்டுள்ளனர் எனவு;ம எகிப்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
எகிப்தில் கடந்த மாதம் இரு ரயில் மோதிக்கொண்டதால் குறைந்தபட்சம் 20 பேர் பலியானதுடன் 199 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
Tags:
world news

