யாழில் இராணுவத்தினர் மோட்டார் சைக்கிளில் ரோந்து; பயண தடையை மீறுபவர்களுக்கு எச்சரிக்கை..!!!


யாழ் நகரில் இராணுவத்தினரின் மோட்டார் சைக்கிள் படையணி  சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

நாட்டில் அதிகரித்துள்ள கொரொனா தீவிர நிலையினையடுத்து  நாடு பூராகவும் இன்று முதல் திங்கட்கிழமை அதிகாலை வரையிலான  மூன்று நாட்களுக்கு பொதுமக்கள்  வீடுகளை விட்டு  வெளியேறாத வகையில், பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண நகரப் பகுதிகளில் இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள்

யாழ்ப்பாண குடாநாட்டில் பிரதான வீதிகளில்  ரோந்து நடவடிக்கையினை மேற்கொண்டு, வீதிகளில் அத்தியாவசிய தேவை, வைத்தியசேவையை பெறும் நோக்கில்  பயணிப்போர் தவிரந்த ஏனையோரை  இடைநிறுத்தி கடுமையாக எச்சரிக்கை செய்து  வீடுகளுக்கு திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

Previous Post Next Post


Put your ad code here