இலங்கையின் பிரபல காப்புறுதி நிறுவனத்தின் யாழ்.நகர் அலுவலகத்தின் பணிபுரியும் ஊழியர்கள் 23 பேர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியிருக்கின்றனர்.
யாழ்.நகரின் வேம்படி சந்திக்கு அண்மையில் செயற்படும் குறித்த நிறுவனத்தின் ஊழியர்களில் ஒருவருக்கு நோய் அறிகுறி காணப்பட்ட நிலையில் கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அதன் போது அவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்தும் ஊழியர்கள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றனர்.
நேற்று வரையில் 23 பேருக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றாளர்கள் அதிக அளவில் அடையாளம் காணப்பட்டதால் யாழ்ப்பாணத்தின் ஊழியர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இதனால் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஊழியர்கள் அழைத்துவரப்பட்டு காப்புறுதி நிறுவனப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக தெரியவந்துள்ளது.
