பருத்தித்துறை ஓடக்கரை வீதியில் 11 பேருக்கு கொரோனா: வீதியின் ஒரு பகுதி முடக்கப்பட்டது..!!!


யாழ். வடமராட்சி பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஓடக்கரை வீதியில் 11 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து வீதியின் ஒரு பகுதி முடக்கப்பட்டுள்ளதாக  செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

பருத்தித்துறை ஓடக்கரை வீதியில் வசித்து வரும் குறித்த 11 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, குறித்த வீதியின் ஒரு பகுதி நேற்று முதல் பொதுப் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு முடக்கப்பட்டுள்ளது.

ஓடக்கரை வீதியின் முடக்கப்பட்ட குறித்த பகுதியில் உள்ள மூன்று வீடுகளில் வசித்து வரும் 11 பேருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கான தொற்று மூலம் எது என்பதையும் அடையாளம் காணமுடியாதுள்ளதாகவும் பருத்தித்துறை சுகாதாரப் பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த தொற்றாளர்களுடன் தொடர்புபட்டவர்களை இனம் கண்டு அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியில் அண்மையில் மரண நிகழ்வு இடம்பெற்றுள்ளதாகவும், அங்கு பலர் வந்து சென்றிருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிப்பதாக  செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post


Put your ad code here