வடக்கில் நேற்று 101 பேருக்கு கொரோனா தொற்று..!!!


வடக்கு மாகாணத்தில் நேற்று வரையான 24 மணி நேரத்தில் நூற்று ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் ஒக்ரோபர் 04ஆம் திகதி தொடக்கம் நேற்று வரையான காலப் பகுதியில் வடக்கு மாகாணத்தில் 5 ஆயிரத்து 948 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய கொரோனா தடுப்புச் செயலணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில்,

நேற்று வரையான 24 மணி நேரத்தில்,

யாழ்.மாவட்டத்தில் 39 பேர்,

கிளிநொச்சி மாவட்டத்தில் 36 பேர்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் 10 பேர்,

வவுனியா மாவட்டத்தில் 14 பேர்,

மன்னார் மாவட்டத்தில் 12 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேபோல கடந்த ஒக்ரோபர் 4ஆம் திகதி தொடக்கம் நேற்று வரையான காலப் பகுதியில் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை,

யாழ்.மாவட்டத்தில் 3094 பேர்,

கிளிநொச்சி மாவட்டத்தில் 696 பேர்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் 877 பேர்,

வவுனியா மாவட்டத்தில் 731 பேர்,

மன்னார் மாவட்டத்தில் 550 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.



 

Previous Post Next Post


Put your ad code here