யாழ்ப்பாணத்தில் 64 பேர் உட்பட வடக்கில் நேற்று 163 பேருக்கு கொரோனா தொற்று..!!!


யாழ்ப்பாணத்தில் 64 பேர் உள்ளடங்கலாக வட மாகாணத்தில் நேற்று 163 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக கொவிட் - 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தினால் இன்று காலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் யாழ்ப்பாணம் - 64, கிளிநொச்சி - 29, முல்லைத்தீவு - 35, வவுனியா - 24, மன்னாரில் - 11 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டதாக கொவிட் - 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தினால் இன்று வெளியிடப்பட்ட நாளாந்த நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நேற்று அதிகமாக கொழும்பில் 429 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

அத்துடன், கம்பஹா - 415, களுத்துறை - 356, நுவரெலியா -162, இரத்தினபுரி - 156, காலி - 155, திருகோணமலை - 95, மாத்தறை - 81, மாத்தளை - 81, மட்டக்களப்பில் 68 பேருக்கும் நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Previous Post Next Post


Put your ad code here