கொரோனாவிலிருந்து பாதுகாப்பு பெற நீரிழிவு நோயாளிகளுக்கு சில மருத்துவ ஆலோசனைகள்..!!!


நீரிழிவு நோயாளிகளுக்கு கொரோனா நோய் தாக்கம் அதிகமாக இருப்பதாக ஆய்வு காட்டுகிறது. இதனால் உயிரிழக்கும் அபாயமும் கருப்பு பூஞ்சை தொற்றும் நீரிழிவு நோயாளர்களுக்கு மேலும் அச்சுருத்துகின்றது.

நீரிழிவு நோய் இருப்பவர்கள் கொரோனா தொற்று ஏற்படாமல் தங்களை பாதுகாத்துகொள்ள என்ன மாதிரியான உணவுகள் எடுக்கலாம் என்பது குறித்து தான் இங்கு தெரிந்து கொள்ள போகிறோம்.

புதிய கொரோனா வைரஸ் நீரிழிவு நோயாளிகளை அதிகமாகவே தாக்கிவருகிறது.
கொரோனாவால் மன அழுத்த பாதிப்பை கொண்டிருப்பவர்கள் வீட்டிலேயே தங்கி இருப்பதன் மூலம் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இதன் போது மனதிற்கு அமைதி தரும் புத்தகங்களை வாசிக்கலாம் அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கலாம்.

இதய நோய், பக்கவாதம் போன்ற அடிப்படை நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வயதானவர்களுக்கும் நோய் தொற்று காரணமாக உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உண்டு.

இந்நிலையில் நீரிழிவு நோயாளிகள் கொரோனாவிலிருந்து பாதுகாப்பு பெற என்ன செய்ய வேண்டும் என்பதை சுகாதார தரப்பினர் அறிவுறுத்தியுள்ளனர்.

சரியான நேரத்தில் உணவை எடுப்பது கொள்ள வேண்டும்.

சீரான இடைவெளியில் உணவை திட்டமிட்டு எடுத்துகொள்வதன் மூலம் அதிகப்படியான உணவை எடுத்துகொள்வதை தடுக்க செய்யலாம். இதன் மூலம் குருதியில் சர்க்கரை அளவை ஒழுங்குப்படுத்தலாம்.

நன்றாக திட்டமிடப்பட்ட உணவுகயை மூன்று வேளைகள் எடுத்துகொள்ளுங்கள். இடையில் இரண்டு சிற்றுண்டிகள் எடுக்கலாம்.

இரவு 9 மணிக்குள் இரவு உணவை எடுத்துக்கொள்வதுடன் படுக்கைக்கு செல்ல முன் ஒரு கப் பால் எடுத்துகொள்ளுங்கள்.

உணவில் 3 முதல் 4 தானியங்களை சேர்ப்பதை உறுதி செய்யுங்கள்.

முழு தானிய இழை இரத்தத்தில் குளுக்கோஸின் வெளியீட்டை குறைக்க செய்கிறது. அதே நேரத்தில் பல நன்மை பயக்கும் விட்டமின்கள் மற்றும் தாதுக்களை வழங்குகிறது.

தினை இரத்த சர்க்கரைகளை கட்டுப்படுத்த உதவுகின்றன. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை திணை சேர்ப்பதை உறுதி செய்யுங்கள்.

புரதம் அவசியம் சேருங்கள்

புரதம் அடங்கிய பருப்புகள், தாவர புரதங்கள், ராஜ்மா, கொண்டைக்கடலை, காராமணி போன்றவை சர்க்கரை கட்டுப்பாட்டுக்கு உதவக்கூடியவை.

மீன்கள், கோழி, முட்டை போன்றவை குறைந்த நிறைவுற்ற கொழுப்பு விலங்கு புரதங்களையும் பாதுகாப்பாக சேர்க்கலாம்.

கொழுப்பு இல்லாத அல்லது குறைந்த கொழுப்பு உள்ள பால், புரதங்களை சேர்க்கலாம். தயிர் சிறந்த புரோபயாட்டிக் ஆகும்.

இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். சர்க்கரை கட்டுப்பாடுகளுடன் நேரடி தொடர்பு கொண்டுள்ளது.

ஆரோக்கியமான கொழுப்புகள் எண்ணெய்கள் மற்றும் விதைகள்

கடுகு எண்ணெய் அல்லது எள் எண்ணெய் அதாவது நல்லெண்ணேய், ஆலிவ் எண்ணெய், வேர்க்கடலை எண்ணெய், அரிசி தவிட்டு எண்ணெய் போன்ற தாவர மூலங்களிலிருந்து ஆரோக்கியமான கொழுப்புகள் ஆரோக்கியத்துக்கு நன்மை அளிக்கும்.

அதிகப்படியான கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகளை ஆரோக்கியமான கொழுப்பு தேர்வுகளுடன் மாற்றுவது இரத்த சர்க்கரைகள் மற்றும் இன்சுலின் கட்டுப்பாட்டையும் மேம்படுத்துகிறது என்பதை ஆய்வுகள் காட்டுகிறது.

வாரத்தில் மூன்று முறையாவது விதைகள் எடுத்துகொள்வது சர்க்கரையை கட்டுக்குள் வைக்க உதவும். இது இதய ஆரோக்கியத்துக்கும் நன்மை செய்யகூடியது.

பழங்கள் மற்றும் காய்கறிகள்

காய்கறிகள் மற்றும் சாலட்கள் எப்போதும் தட்டில் நிறைந்திருக்க வேண்டும்.
பழங்கள், கீரைகள், போன்றவற்றை நார்ச்சத்து மட்டுமல்லாமல், வைட்டமின்கள், தாதுக்கள் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்ஸ் போன்றவை கொண்டிருப்பதால் தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கும்.

Previous Post Next Post


Put your ad code here