அடுத்த வாரமும் பாடசாலைகளுக்கு பூட்டு..!!!


நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் அடுத்தவாரமும் முழுமையாக மூடப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில் இவ்வாறு பாடசாலைகளை அடுத்த வாரமும் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், எதிர்வரும் 7ஆம் திகதி இடம்பெறவுள்ள விசேட கலந்துரையாடலைத் தொடர்ந்து பாடசாலை ஆரம்பமாகும் தினம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் கல்வியமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

முன்னதாக, ஏப்ரல் 30ஆம் திகதி வரை அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post


Put your ad code here