எந்தெந்த பகுதிகளுக்கு சென்றவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றார்கள்? – சுகாதார அமைச்சு வெளியிட்ட புதிய தகவல்..!!!


கொரோனா அச்சுறுத்தலில் இந்தியா எதிர்நோக்கியுள்ள நிலைமைக்கு, இலங்கையும் செல்லக்கூடிய அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவின் விசேட வைத்தியர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவிக்கின்றார்.

கொவிட் பரவிலில் இலங்கையின் நிலைமையை, இந்தியாவுடன் ஒப்பிட முடியும் என அவர் கூறுகின்றார்.

ஒரே நாளில் அதிகளவிலான கொவிட் தொற்றாளர்கள் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட பின்னணியிலேயே, அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கதிர்காமம் மற்றும் நுவரெலியா ஆகிய பகுதிகளுக்கு சென்றவர்களே, கொவிட் தொற்றினால் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

Previous Post Next Post


Put your ad code here