வவுனியாவில் பொலிசார் திடீர் சோதனை: முககவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை..!!!


வவுனியா நகர வீதிகளில் இன்று (01.05.2021) விசேட சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்ட பொலிசார் முககவசம் அணியாதவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நாட்டில் கொவிட் 19 இன் மூன்றாவது அலையின் தாக்கம் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், சுகாதார நடைமுறைகள் தொடர்பாக பொலிசாரும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அந்தவகையில், வவுனியா நகரப் பகுதியில் விசேட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பொலிசார்  வீதியில் பயணிப்போர், பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகள், வாகனங்கள் என்பவற்றை மறித்து கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதுடன்,  சுகாதார நடைமுறைகளைப் பேணாதோர், முககவசம் அணியாதோர், முககவசத்தை சீராக அணியாதோர் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அவர்களது பெயர் விபரங்கள் திரட்டப்பட்டு, அவர்களுக்கு கடும் எச்சரிக்கையும் பொலிசாரால் வழங்கப்படுவதுடன், சுகாதார அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

Previous Post Next Post


Put your ad code here