உடன் அமுலுக்குவரும் வகையில் மேலும் சில பகுதிகளை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.
இதன்படி, பிலியந்தலை பகுதியின் நாம்பமுனுவ மற்றும் கொரகாபிட்டி ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.
அத்துடன், அம்பலங்கொட பகுதியின் கொடஹேன மற்றும் தல்கஸ்கொட ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படுகின்றன.
தெஹியத்தகண்டி பகுதியின் தெஹியத்தகண்டி மற்றும் கதிராபுர ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கலவானை பகுதியின் ஹபுகொட கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
Tags:
sri lanka news
