இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட கொவிட் பாதுகாப்பு தலைகவசம்: விலை எவ்வளவு தெரியுமா? (VIDEO)


கொவிட் – 19 வைரஸிடமிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக இலங்கையில் விசேட தலைகவசம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

களனி பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி குழுவினால் இந்த தலைகவசம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறைந்த செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த தலைகவசத்தினால், முகக் கவசம், கைகளுக்கான பாதுகாப்பு என அனைத்து நன்மைகளும் கிடைப்பதாக களனி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இந்த தலைகவசம் அணிந்திருக்கும் சந்தர்ப்பத்தில், எவரேனும் ஒருவர் காய்ச்சலுடன் வருகைத் தந்தால் ஒரு மீற்றர் தூரத்தில் வைத்து எம்மால் அதனை உணர்ந்துக்கொள்ள முடியும்.

அத்துடன், தலைகவசம் அணிந்திருக்கும் சந்தர்ப்பத்திலேயே தொலைபேசி பேசும் வசதியும் இதில் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த தலைகவசம் முழுமையான பாதுகாப்பை வழங்கும் என களனி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தலைகவசத்தின் விலை இலங்கை மதிப்பில் 10,000 ரூபா எனவும், தொகையான கொள்வனவு செய்யப்படுமாக இருந்தால் இலங்கை மதிப்பில் 8,000 ரூபாவிற்கு வழங்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.




Previous Post Next Post


Put your ad code here