நாட்டை முற்றாக முடக்குவதற்கு எந்த முடிவும் இல்லை என்று இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
ஆனால் மாகாணங்களுக்கு இடையில் தேவையற்ற நடமாட்டத்தைத் தடுக்க எதிர்காலத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று அவர் கூறினார்.
இத்தகைய கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், அத்தியாவசிய பொருள்களை வழங்குவது உள்பட மக்களின் அத்தியாவசிய நடவடிக்கைகள் எந்தவித இடையூறும் இன்றி மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராணுவ தளபதி சுட்டிக்காட்டினார்.
உணவுப் பொருள்களைச் சேமிப்பதற்காக கடைகள், பல்பொருள் அங்காடிகள் போன்றவற்றில் நீண்ட வரிசைகளை அமைக்க வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அவர. அறிவரை வழங்கினார்.
இதற்கிடையில், கொவிட்-19 தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்த முப்படைகளையும் கடமைக்கு அமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் கொவிட் -19 நோயாளிகள் அதிகம் பதிவாகும் பகுதிகளில் தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்படும் என்று ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்
