நள்ளிரவு முதல் மாகாண எல்லைகளில் வீதித் தடைகள்; பொலிஸாரின் லீவுகள் ரத்து..!!!


இன்று (11.05.2021) நள்ளிரவு முதல் அனைத்து மாகாண எல்லைகளிலும் வீதித் தடைகளை அமைத்து முப்பபடையினர் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர் கடமைக்கு அமர்த்தப்படுகின்றனர்.

அதனால் விடுமுறை ஓய்வு மற்றும் சுற்றுலா பயணங்கள் தடை செய்யப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார்.

அத்துடன், அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுப்பு நாளை (மே 12) முதல் மே 31ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, வேலைக்கு அழைக்கப்படும் அரச ஊழியர்கள் சேவைத் தேவைகள் குறித்து மாகாணங்களுக்கு இடையே பயணம் செய்யும் போது நிறுவனத் தலைவரிடமிருந்து ஒரு கடிதத்தை பெற்றிருத்தல் வேண்டும் என்று பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்

Previous Post Next Post


Put your ad code here