உலகையை திரும்பி பார்க்கவைத்த ட்விட்டர் பதிவு..!!!


கொரோனா வைரஸானது சீனாவில் உருவாகி தற்போது உலகம் முழுவதும் பல கோடி மக்களின் உயிரைக் குடித்து வருகிறது.

தற்போது, உலக அளவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமாக காணப்படுவதையடுத்து, தற்போது வரையில் 33 இலட்சத்து 17,866 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

மேலும், 159,609,923 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த 2013 ஜூன் 3ஆம் திகதி மார்கோ அகார்டஸ் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “Corona Virus…its coming” என்று பதிவிட்டுள்ள விடயம் தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

உலகை அச்சுறுத்தப்போகும் கொரோனா வைரஸ் வரும் என்பதை இவர் முன்கூட்டியே கணித்தாரா அல்லது அவர் இதை விளையாட்டாக பதிவிட்டாரா என்பது தெரியவில்லை. மேலும் இவரது ட்விட்டர் கணக்கு கடந்த 2016ஆம் ஆண்டுக்கு பின்னர் பயன்பாட்டில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.




Previous Post Next Post


Put your ad code here