கொரோனா நோயாளர்களுக்கு வீடுகளிலேயே சிகிச்சை வழங்க நடவடிக்கை - அரசாங்கம் அதிரடி அறிவிப்பு..!!!

 


பீ.சி.ஆர் பரிசோதனையின் ஊடாக கொரோனா நோயாளர் என அடையாளம் காணப்படும் ஒருவருக்கு எவ்வித நோய் அறிகுறியும் இல்லாத சந்தர்ப்பத்தில் அவரை வீட்டிலேயே வைத்து கண்காணிப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் திங்கட் கிழமை முதல் இந்த நடைமுறையை பின்பற்றவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், வீட்டில் கண்காணிக்கும் நோயாளர்களுக்கு திடீர் அறிகுறிகள் காணப்படுமாயின், அவர்களை உடனடியாக வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Previous Post Next Post


Put your ad code here