யாழ்ப்பாணத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 80 பேருக்கு கொரோனா தொற்று..!!!


யாழ்.பல்கலைக்கழகம், யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடங்களில் நேற்று(07)  மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த ஒரு வயதுக்கு உட்பட்ட இரண்டு குழந்தைகள் உட்பட்ட 80 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் 276 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகளில் யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 59 தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன் அடிப்படையில்,

சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 27 (01 வயதுக்கு உட்பட்ட இரண்டு ஆண் குழந்தைகள், 04, 08, 09 வயதுகளை உடைய சிறுவர்கள், 16 வயதுடைய சிறுமியும் உள்ளடக்கம்)

உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 17 (03 வயதுடைய சிறுமியும் உள்ளடக்கம்)

யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 07 (14 வயதுடைய சிறுவனும் உள்ளடக்கம்)

கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 08 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்.போதனா வைத்தியசாலையில்  604 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் யாழ்.குடாநாட்டினைச் சேர்ந்த 21 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன் அடிப்படையில்,

நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேர்,

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் ஒருவர்,

மானிப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 07 பேர்,

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 03 பேர் (15 வயதுடைய சிறுவனும் உள்ளடக்கம்)

யாழ்.போதனா வைத்தியசாலையில் 03 பேர்,

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர்,

காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர்,

திருநெல்வேலி நொதேர்ன் தனியார் வைத்தியாசாலையில் ஒருவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Previous Post Next Post


Put your ad code here