முடக்கப்பட்ட யாழ் நகர்ப்பகுதியில் தடைமீறும் செயல் குறித்து பொதுமக்கள் விசனம்..!!!


தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக கடந்த நாட்கள் முடக்கப்பட்ட யாழ் நகரப் பகுதியான குருநகர், பாசையூர் பகுதிகள் அறிவிக்கப்பட்டது.

இப் பகுதிகளுள் உட் செல்லவோ வெளிச்செல்லவோ அனுமதி அற்ற நிலையில் சில இளைஞர்களும் முதியவர்களும் மாறி மாறி வெளித் திரிவதனை காணமுடிந்ததாக தெரிய வருகின்றது.

இந்நிலையில் வெளிச்செல்லும் இப் பகுதியைச் சேர்ந்த மக்களால் சுகாதார பாதுகாப்பற்ற நிலையில் கொரோணா தொற்றுக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் அயலில் வசிக்கும் மக்கள் மற்றும் வீதிவழியே அவதானித்த மக்கள் அச்சமும் அதிருப்தியும் தெரிவித்தனர்.

மடத்தடி தண்ணீர்த் தாங்கி பிரதேசத்தில் காவலர்களை நியமித்த நிலையில் குருநகர் ஓடக்கரை வீதியில் காவலர்கள் இன்றி வீதித் தடை மட்டுமே போடப்பட்டிருப்பதனால் இவ்வாறான பொறுப்பற்ற நிலையில் மக்கள் நடமாடுவதாக ஏனையோரும் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.தர்மினி




 

Previous Post Next Post


Put your ad code here