Saturday 26 June 2021

43 தடவைகள் கொவிட் பொஸிட்டிவ்! தப்பிவந்த தாத்தாவின் ஆச்சரிய கதை..!!!

SHARE


சுமார் பத்து மாதங்களாக 43 தடவைகள் கொவிட் சோதனை செய்தபோதும் பொஸிட்டிவ் என்று விடைகொடுத்த முதியவரின் உடல், ஒருநாள் திடீரென்று கோவிட் நெகட்டிவ் என்று அறிவிக்க, துள்ளிக்குதித்துக்கொண்டு மருத்துவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு வைத்தியசாலையால் விடைபெற்றிருக்கிறார்.

இந்தசம்பவம் பிரித்தானியா பிறிஸ்டலில் இடம்பெற்றுள்ளது. கோவிட்டோடு சமராடி உயிர்பிழைத்து வந்தவர் ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டியில், தனக்கு இப்போது வழங்கப்பட்டிருப்பது இரண்டாவது வாழ்க்கை என்று பெருமூச்சு விட்டிருக்கிறார்.

இவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் டேவ் எனப்படும் இந்த அதிஷ்டசாலி உலக சாதனையாளர் என்கிறார்கள். கோவிட் கிருமி அதிக காலம் உயிர்வாழ்ந்த மனித உடல் இவருடையது என்கிறார்கள் மருத்துவர்கள். கடந்த மார்ச் மாதம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இந்த முதியவரின் உடலில், சுமார் முன்னூறு நாட்கள் கோவிட், குடும்பம் நடத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முன்னூறு நாட்கள் பற்றி டேவ் கூறும்போது – “அது ஒரு மரண அவஸ்தை. சிலவேளைகளில் காலை ஐந்து மணி முதல் பத்துமணிவரை தொடர்ச்சியாக இருமிக்கொண்டேயிருந்திருக்கிறேன்” – என்கிறார். ஒரு கட்டத்தில் தான் சாவதற்கு தயாராகிவிட்டதாகவும், மனைவியிடம் விடைபெற்றுவிட்டு ஒவ்வொரு நாளும் சாவை எதிர்பார்த்திருந்ததாகவும் ஆனால், சாவுக்கு மட்டுமல்ல கொரோனாவுக்கும் கடைசியில் என்னை பிடிக்கவில்லை என்று சொல்லி சிரித்துக்கொண்டார்.

SHARE