யாழில்.கணவனுடன் சென்ற பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு..!!!


யாழில்.கணவருடன் முச்சக்கர வண்டியில் ஆலயத்திற்கு சென்று கொண்டிருந்த மனைவி மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் வேலணை பகுதியை சேர்ந்த 32 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார் .

சுன்னாகத்தில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு கணவனுடன் முச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போது , திடீரென மயக்கமுற்றுள்ளார். அதனை அடுத்து அவரை , யாழ்.போதனா வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போது , அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.

அந்நிலையில் மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ந. பிரேம்குமார் மேற்கொண்டுள்ளார். அதேவேளை சடலம் பிரதே பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here