இன்று காலை முடக்கப்பட்ட பகுதிகள்..!!!


3 மாவட்டங்களைச் சேர்ந்த  சில கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களைச் சேர்ந்த கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நொரகல்ல கிராம சேவகர் பிரிவின் நொரகல்ல மேல் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் யக்தெஹிவத்த கிராம சேவகர் பிரிவின் பின்கந்த 1 மற்றும் பின்கந்த 2 ஆகிய பகுதிகளும் பாதகட கிராம் சேவகர் பிரிவின் பின்கந்த 3 பகுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை மொனராகலை மாவட்டத்தின் ஹிதிகிவுல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நக்கலவத்த கிராமம் மற்றும் மில்லகெலே வத்த கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Previous Post Next Post


Put your ad code here