பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இடமாக கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப்பிரிவு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டு இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு தற்காலிக ஏற்பாடுகள் சட்டம் 9 ஆம் பிரிவின் கீழ், ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதனூடாக தடுப்புகாவல் அனுமதியுள்ள காலம் வரையில் கிருலப்பனையில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப்பிரிவிலேயே தடுத்து வைத்திருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Tags:
sri lanka news