வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய பயணிகளை அழைத்துக்கொண்டு கிளிநொச்சி பூநகரி தனிமைப்படுத்தல் நிலையம் நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
வவுனியா – ஓமந்தை பனிக்கன் நீராவிப்பகுதியில் இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலை வீதிக்கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கனரக வாகனத்துடன் மோதி குறித்த பேருந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
0000000
இதன் போது பேருந்தில் 7 பேர் பயணம் செய்த நிலையில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், விபத்து தொடர்பாக ஓமந்தை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Tags:
sri lanka news