பயணத்தடை ஜூன் 21ஆம் திகதிவரை நீடிப்பு..!!!
நாடுமுழுவதிலும் நடைமுறையில் இருக்கும் பயணத்தடை இந்த மாதம் 21 ஆம் திகதிவரை நீடிக்கப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
அதன்படி, பயணக் கட்டுப்பாடுகள் 14 ஆம் திகதி அகற்றப்படாது. இந்த மாதம் 21 ஆம் தேதி அதிகாலை 4 மணி வரை நடைமுறையில் இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இனிவரும் நாள்களில் பயணத்தடை நடைமுறையில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். அவை தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து, மே 21ஆம் திகதி முதல் அரசு பயணக் கட்டுப்பாடுகளை விதித்தது.
கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும், இலங்கை தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.
பயணக் கட்டுப்பாடுகளை விதித்த போதிலும் கொவிட்-19 தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இன்று முன்னதாக, அரச தகவல் திணைக்களம் 101 புதிய கொவிட்-19 தொடர்பான இறப்புகளை உறுதிப்படுத்தியது. அதன்படி, இலங்கையில் கொவிட்-19 இறப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்து 11ஆக உயர்ந்துள்ளது.
நேற்று 2 ஆயிரத்து 738 நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட கோவிட்-19 நோயாளர்களின் எண்ணிக்கை 2 லட்ச்தது 16 ஆயிரத்து 134 ஆக உள்ளது.