கிளிநொச்சி விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி..!!!


யாழ்ப்பாணம் நீதிமன்ற கட்டடத் தொகுதி பொலிஸ் காவலரனில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி – கரடிப்போக்கு இணைப்பு வீதியில் இன்று மாலை 4.30 மணியளவில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற பொலிஸ் உத்தியோகத்தராகக் கடமையாற்றும் அநுராதபுரத்தைச் சேர்ந்த பி.எஸ்.புஷ்பகுமார என்பவரே உயிரிழந்துள்ளார்.

விடுமுறை முடித்து கடமைக்குத் திரும்புவதற்காக மோட்டார் சைக்கிளில் யாழ்ப்பாணம் பயணித்துள்ளார். அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டையிழந்து வாய்க்காலுக்குள் பாய்ந்ததால் விபத்து இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் ஒரு மணிநேரத்துக்கு பின்பே சடலமும் மோட்டார் சைக்கிளிலும் வாய்க்காலில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Previous Post Next Post


Put your ad code here