கொவிட் – 19 தொற்றுநோயை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கும் வகையில் கடவுச்சீட்டு பெற வருபவர்கள் இணையம் ஊடாக திகதி மற்றும் நேரத்தை முற்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
கடவுச்சீட்டுக்கான விண்ணப்பத்தை பத்தரமுல்லையில் உள்ள தலைமை அலுவலகம், மாத்தறை, வவுனியா, கண்டி மற்றும் குருநாகல் பிராந்திய அலுவலகங்களில் குறைந்த எண்ணிக்கையிலான விண்ணப்பத்தாரிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அத்தியாவசிய தேவைகள் உள்ள விண்ணப்பதாரிகள் அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலுள்ள அலுவலகங்களில் பெற திகதி மற்றும் நேரத்தை முற்பதிவு செய்ய வேண்டும் என்றும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கீழ் குறிப்பிடப்பட்டுள்ள இணைய முகவரியில் சென்று கடவுச்சீட்டு பெறுவதற்கான திகதி மற்றும் நேரத்தை முற்பதிவு செய்து கொள்ள முடியும்.
https://eservices.immigration.gov.lk/appointment/pages/reservationApplication.xhtml
