வௌிநாடுகளில் இருந்து வருவோருக்கான தனிமைப்படுத்தல் புதிய சுற்றறிக்கை வெளியீடு..!!!


வௌிநாடுகளில் இருந்து இலங்கைக்குச் வருகை தருவோருக்கான புதிய தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகள் உள்ளடக்கிய சுற்றறிக்கை ஒன்றை சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ளார்.

அதன்படி, இலங்கை குடிமக்கள் நாடு திரும்புவதற்கு 96 மணி நேரத்திற்கு முன்னர் பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தல் அல்லது வருவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட விரைவான அன்டிஜென் பரிசோதனை அறிக்கையையோ கட்டாயமாக்க வைத்திருத்தல்வேண்டும்.

வெளிநாட்டினர் மற்றும் இரட்டை குடியுடையோர் நாட்டில் தரையிறங்குவதற்கு 96 மணி நேரத்திற்கு முன்னர் முன்னெடுத்த பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையில் தொற்று இல்லை என்ற அறிக்கை வைத்திருக்கவேண்டும்.

தனிநபரால் பெறப்பட்ட கொவிட்-19 தடுப்பூசிகள் தொடர்பான தகவல் அட்டையை ஆங்கில மொழியில் மட்டுமே தயாரிக்கப்பட வேண்டும்.

வெளிநாட்டிலிருந்து வரும் நபர்கள் நாட்டுக்குள் வருகை தந்த முதல் நாளில் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அதே நேரத்தில் அவர்கள் ஒரு நட்சத்திர விடுதி அல்லது தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் 14 நாள்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

இராஜதந்திரிகள் தங்களது தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை அந்தந்த தூதரகம் வழங்கும் தங்குமிடத்தில் செலவிட அனுமதிக்கப்படுவார்கள்.

கொவிட்-19 தடுப்பூசி பெற்ற இலங்கையர்கள் அல்லது வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் இரட்டை குடிமக்கள், வெளிநாடுகளுக்கு பயணிக்கும் போது 14 நாள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை நிறைவு செய்தமை தொடர்பில் சுகாதார சேவைகளுக்கு அறிவிக்க வேண்டும் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள புதிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Previous Post Next Post


Put your ad code here