உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஆஸ்திரேலிய மயிர்கொட்டி..!!!


இன்னமும் மனித அறிவுக்கு எட்டாத பல இயற்கையின் அதிசயங்கள் உலகெங்கும் கொட்டிக்கிடக்கின்றன. மனிதனின் கண்டுபிடிப்புக்கள், எத்தனையோ உயிரினங்கள் பற்றிய புதிய தகவல்களை – பயன்களை – இயல்புகளை வெளிக்கொண்டுவந்திருந்தாலும் இன்னமும் வெளிவராத அதிசயங்கள் ஆராய்ச்சி நிலையிலேயே உள்ளன.

அந்தவகையில், ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து காடுகளிலுள்ள கொடிய மயிர்கொட்டி குடும்பத்திடமிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய நஞ்சு, பல மருத்துவ தயாரிப்புக்களுக்கு பயன்படக்கூடியது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

சுமார் 59 வகையான வித்தியாசமான குடும்பங்களை கொண்ட இந்த மயிர்கொட்டிகளிடமிருந்து 150 வகையான நஞ்சுகளை பெற்றுக்கொள்ளக்கூடிய சாத்தியங்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நஞ்சுத்திரவத்தினை மூலப்பொருளாகக்கொண்டு பக்டீரியா அழிப்பதற்கான மருந்துகளை தயாரிக்கலாம், கொடிய கிருமி நாசினிகளை தயாரிக்கலாம், இன்னும் பல தேவைகளுக்கு உபயோகப்படுத்தலாம் என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Previous Post Next Post


Put your ad code here