நாட்டில் நிலவிய அசாதாரன சூழ்நிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த யாழ். வண்ணை ஶ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய பெருந்திருவிழா எதிர்வரும் பதினாறாம் திகதி கொடியேறவுள்ளதாக ஆலய முதன்மை பிரதமகுரு இராஜஸ்ரீ சிவகமல்ராஜ குருக்கள் தெரிவித்துள்ளார்.
நாட்டில் அதிகரித்துவரும் கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்ப்பதற்காக, மூடப்பட்டிருந்த வழிபாட்டுத் தலங்கள் தறபோது திறக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ள இந்நிலையில் யாழ். வண்ணை ஶ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய பெருந்திருவிழா எதிர்வரும் பதினாறாம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேறவுள்ளதுடன், அன்றைய தினம் அதிகாலை ஆறு மணிக்கு சம்ப்ரோஷண கும்பாபிஷேகம் நடைபெற்று தொடர்ந்து ஏழு மணிக்கு வசந்தமண்டப பூஜையும் எட்டு மணிக்கு கொடியேற்றமும் இடம்பெற்று தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வீதிவலம் வந்து அடியவர்களுக்கு அருள்பாலிக்கவுள்ளதாக ஆலய பிரதமகுரு தெரிவித்துள்ளார்.
மேலும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு 27 நாட்கள் நடைபெறவுள்ள பெருந்திருவிழாவானது அடியார்களின் ஒத்துழைப்புடன் மிகச்சிறப்பாக நிறைவுபெற வேண்டுமென்று பிரதமகுரு சிவஶ்ரீ சிவ.கமல்ராஜ குருக்கள் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மே மாதம் 31ம் திகதி நடைபெற இருந்த ஆலய மஹோற்சவம் கொரோனா பரவல் அச்சம் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.