
தேங்காய் சட்னி, கார சட்னி, சாம்பார் என சாப்பிட்டே சலித்து போனவர்களுக்காக மிகவும் ருசியான வெங்காயம், தக்காளி மட்டும் வைத்து செய்யும் சைடிஷ் பற்றி இங்கே பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம்- 10
தக்காளி- 2
பூண்டு- 2
கடலை பருப்பு - தாளிக்க
கடுகு, உளுந்தம் பருப்பு- தாளிக்க
கருவேப்பில்லை- தேவையான அளவு
மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்
மிளகாய் தூள்- அரை டீஸ்பூன்
சாம்பார் பொடி- ஒரு டீஸ்பூன்
அரிசி மாவு- ஒரு டீஸ்பூன்
செய்முறை
முதலில் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுந்தம் பருப்பு சேர்க்கவும்.
இதனுடன் கடலை பருப்பு சேர்த்து நன்கு பொரிந்ததும், நறுக்கி வைத்த வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர், பொடியாக நறுக்கி வைத்த தக்காளி சேர்த்து வதக்கவும்.
பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாம்பார் பொடி சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.
பொடியின் வாசனை போகும்வரை வதக்கிவிட்டு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி சுமார் 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
கடைசியில் கரைத்து வைத்த அரிசி மாவு சேர்த்து கிளறிவிட்டு, 3 நிமிடங்கள் கொதிக்க விடவும், அவ்வளவு தான் ருசியான சைடிஷ் தயார்!! இதை இட்லி, தோசை, சப்பாத்திக்கு தொட்டு சாப்பிடலாம்.