வயிற்றுப் புண்களை ஆற்றும் ஆட்டு குடல் குழம்பு செய்வது எப்படி?


ஆட்டுக்கறியை சுவைப்பதை விட அதன் உறுப்புகள் நம் உடலுக்கு ஏராளமான நன்மைகளை அள்ளி வழங்குகின்றன.

ஆட்டுக்குடலில் இருக்கும் ஜெலட்டின் மற்றும் புரோபயாடிக்குகள் செரிமான கோளாறுகளை சரிசெய்கின்றன.

குறிப்பாக வயிற்றுப்புண்களால் அவதிப்படும் நபர்கள் வாரம் ஒருமுறை குடலை சமைத்து சாப்பிடுவது பலனை தரும்.

தேவையான பொருட்கள்
  1. சுத்தம் செய்த குடல் - 1
  2. இஞ்சி - சிறு துண்டு
  3. பூண்டு - 4 பல்
  4. சின்ன வெங்காயம் - 50 கிராம்
  5. தேங்காய்துருவல் - 1/2 கப்
  6. பெரிய வெங்காயம் - 150 கிராம்
  7. தக்காளி - 200 கிராம்
  8. மிளகாய் தூள் - 3/4 தேக்கரண்டி
  9. தனியா தூள் - 1/2 தேக்கரண்டி
  10. சோம்பு, சீரக தூள் - 1தேக்கரண்டி
  11. பட்டை - 2 துண்டு
  12. லவங்கம் - 2
  13. ஏலம் - 1
  14. சோம்பு - சிறிதளவு
  15. நல்லெண்ணெய் - தேவையான அளவு
  16. உப்பு - தேவையான அளவு
  17. கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை

வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

குடலை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

முதலில் இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், தேங்காய் இவற்றை அரைத்து வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, சோம்பு, லவங்கம், ஏலம் போட்டு தாளித்த பின் அரிந்த பெரிய வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

அடுத்து தக்காளியை சேர்த்து வதக்கவும், தக்காளி நன்கு வதங்கியவுடன் மிளகாய், தனியா, சோம்பு, சீரக பொடி, உப்பு சேர்த்து 2 நிமிடம் நன்றாக வதக்கிய பின்னர் சுத்தம் செய்த குடலையும் அதனுடன் சேர்த்து குக்கரை மூடி 11 விசில் விட்டு இறக்கவும்.

தண்ணீர் அதிகமாக சேர்க்க கூடாது, ஏனெனில் குடல் தண்ணீர் விட்டு வேகும்.

விசில் போனவுடன் குக்கரில் மூடியை திறந்து அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான குழம்பு ரெடி!!!
Previous Post Next Post


Put your ad code here