விஜய் டிவி தொலைக்காட்சியில் வருடம் தோறும் ஒளிபரப்பாகும் முக்கிய நிகழ்ச்சி தான் பிக்பாஸ், இந்த நிகழ்ச்சிக்கு பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.
மேலும் கடைசியாக நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியும் ரசிகர்களின் பேராதரவை பெற்றுது, இதில் பிரபல நடிகர் ஆரி பிக்பாஸ் டைட்டிலை தட்டி சென்றார்.
இந்நிலையில் இந்த பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்து கொண்டு பிரபலமான நட்சத்திரம் சம்யுக்தா, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு செம பிஸியாக உள்ளார்.
மேலும் தற்போது அறிமுக இயக்குனர் ஹேமந்த் குமார் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் புதிய திரைப்படத்தின் தொடக்க பூஜை நடந்துள்ளது.
இதில் சம்யுக்தாவும் கலந்து கொண்டுள்ளார்,மேலும் இப்படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Tags:
cinema news